×

இருக்கிற கோவத்துக்கு என்ன பண்ணுவேன்னு தெரியாது... ரியல் எஸ்டேட் அதிபருக்கு போனில் கொலைமிரட்டல் விடுத்த அமைச்சர் தங்கமணி: குமாரபாளையத்தில் வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு

சேலம்: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தனது தொகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வைரலாகி, தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் விஜய்கண்ணன். ரியல் எஸ்டேட் அதிபரான இவர், தனது புதிய பிளாட்டுக்களுக்கு அப்ரூவல் வழங்க அமைச்சர் தங்கமணி தடைபோடுவதாக புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது நண்பரான வினோத்குமாருக்கு அமைச்சர் தங்கமணி போன் செய்து, விஜய்கண்ணனுக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆடியோவில் வரும் அமைச்சரின் பேச்சு: ‘‘அந்த விஜய்கண்ணன் இருக்கிறானே, ரியல் எஸ்டேட் பண்றவன். அவன் என்ன ஆபீசுக்கு போயி மிரட்டி, அப்படி என்னா மந்திரி பண்ணிட்டாரு, நான் போராட்டம் பண்ணுவேன், அப்படி இப்படின்னு சொன்னால் பாத்துக்கிட்டு இருப்பேனா நானு? அவனை கிராஸ் செக் பண்ண சொல்றேன். அவனை என்ன போராட்டம் வேணும்னாலும் பண்ணச் சொல்லுங்க. நான் பாத்துக்கிறேன். அவன் என்ன சொன்னாலும் நான் கேட்பேன்னு நினைச்சுக் கிட்டானா? ‘நானே போயி மிரட்டிட்டு வந்தேண்ணா...’

‘கண்டிப்பா அவன் கேட்கறதை நான் பண்ணித்தர மாட்டேன். கலெக்டரிடம் நாளைக்கே சொல்லி நிறுத்தப்போகிறேன். முளைச்சு மூணு இல விடல. இவன் யாரு? என்னை வந்து கேட்கறதுக்கு. சொன்னா ....ப்புடுங்கிருவானா அவன்? அவனை நான் விடப்போறதில்லை. என்ன போராட்டம் வேணாலும் பண்ணட்டும். நான் பார்த்துக் கொள்கிறேன். நான் ஆபீசில சொல்லி ஒரு பெட்டிஷன் வாங்கி, புடிச்சு உள்ள போடுறேன். என்ன பண்ணுவான்னு பார்க்கலாம். வார்டு மெம்பரை எல்லாம் பிடிச்சு மிரட்டினாங்க, அசிங்கமாக திட்டினாங்க அப்படின்னு ஒரு பெட்டிஷனை வாங்கி பிடிச்சு உள்ளே போடச் சொல்றேன். எந்த ஊருக்காரன் அவன்? நான் சொன்னதை சொல்லிப்புடுங்க. அவன் எப்படி அந்த இடத்தை விற்பான்னு நான் பாத்துக்கிறேன்....

‘நேர்ல அழைச்சிட்டு வரட்டுமா அண்ணா...’‘நேர்ல அவனை கூட்டிட்டு வரவேண்டாம். வந்தால் எனக்கு இருக்கிற கோவத்துக்கு என்ன பண்ணுவேன்னே தெரியாது. இவன் யாருய்யா என்னை வந்து பேசுறதுக்கு? இவன் தரம் என்ன? என் தரம் என்ன? கண்டிப்பா பண்ணமுடியாதுன்னு சொல்லிருங்க. நானா? அவனா? என்று பாத்துக்கிறேன். அதுக்காக அவன் எலக்‌ஷன்ல என்ன பிரச்னை பண்ணாலும் பாத்துக்கிறேன்,’’ இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசிய ஆடியோ வைரலாகி தற்போது தொகுதி முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Tags : Govt , Death threat, Minister Thangamani, audio
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...