×

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் 2 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று: கடைகளுக்கு சீல்

அண்ணாநகர்: கோயம்பேடு பழ மார்க்கெட்டில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்களின் கடைகளை மூடி சிஎம்டிஏ அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுகாதாரத்துறை மற்றும் சிஎம்டிஏ நிர்வாகம் சார்பில், வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் என தினமும் 300 இருந்து 500 பேர் வரை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதேபோல் பறக்கும் படை மூலமாக முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று ஒலிப்பெருக்கி மூலமாக விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு பழ மார்க்கெட்டில்  பணிபுரியும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு சமீபத்தில்  கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் நேற்று  இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கடைக்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ெதாடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அந்த கடைகளுக்கு சென்று கிருமி நாசினி தெளித்து கடைகளை மூடி சீல் வைத்தனர். தொடர்ந்து, மார்க்கெட்டுக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்த இருவர்  போலியான முகவரியை கொடுத்திருந்தனர்.

அவர்கள்  இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியை அடுத்து இருவர் தப்பி சென்றனர். இவர்கள் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தாக்கத்திற்கு கோயம்பேடு மார்க்கெட் முக்கிய பங்கு வகித்திருந்த  நிலையில்.  தற்போது 2ம் கட்ட நிலையில் மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பாதிப்பு 2 பேருக்கு உறுதியாக இருப்பதை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Coimbatore , Corona infection for 2 traders at Coimbatore fruit market: Seal for shops
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...