மகளிர் சுயஉதவி குழுவினரிடம் துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று காலை 65வது வார்டுக்கு உட்பட்ட ஜி.கே.எம். காலனி 34வது தெரு, 64வது வார்டுக்கு உட்பட்ட அஞ்சுகம் நகர் 3வது தெரு ஆகிய பகுதிகளில் பொதுநலச்சங்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, யுனைடெட் காலனியில் பொதுநலச்சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்தார். 66வது வார்டுக்கு உட்பட்ட 70 அடி சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருநங்கைகளுடன் ஆலோசனை நடத்தி வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து மாலையில் 68வது வார்டுக்கு உட்பட்ட மல்லிப்பூ நகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். 66வது வார்டில் தனியார் தியான மண்டம் மற்றும் 70அடி சாலையில் உள்ள தனியார் மண்டபம், லட்சுமணன் நகர் ஆகிய இடங்களில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். கொளத்தூர் பகுதி செயலாளர்கள் நாகராஜ், ஐசிஎப் முரளி, தேபஜவகர், மகேஷ்குமார், வட்ட செயலாளர்கள் வாசுதேவன், சவுந்தர், சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>