×

தொகுதி பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: ஐட்ரீம்ஸ் மூர்த்தி பிரசாரம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, வண்ணாரப்பேட்டை பகுதியில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும், மலர் தூவியும் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அச்சாரமாக ராயபுரத்தில் எனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். நான் இதே தொகுதியில் வசிப்பவன். உங்கள் பிரச்னைகளை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம். உடனடியாக சரிசெய்து கொடுப்பேன். இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

கழிவுநீர் பிரச்னை, சாலையில் தேங்கி கிடக்கும் குப்பை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். தேர்தலில் வெற்றிபெற்றதும் தொகுதியில் உள்ள பிரச்னையை தீர்ப்பதுதான் என்னுடைய முதல்வேலை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னையை முன்னின்று தீர்ப்பது திமுக மட்டும்தான்,’ என்றார். ராயபுரம் தொகுதி பொறுப்பாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, பகுதி செயலாளர் செந்தில், வட்ட செயலாளர் மோகன் மற்றும் திமுக, கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.

Tags : Significance for block issues: Idreams Murthy campaign
× RELATED நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பச்சைத் துரோகம்: வைகோ கண்டனம்