×

சென்னை குடிநீர் தேவைக்கு கண்டலேறு அணையிலிருந்து மே மாதம் தண்ணீர் திறப்பு? ஆந்திர அதிகாரிகள் தகவல்

சென்னை:  சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் உள்ளது. இந்த ஏரிகள் வறண்டால் சென்னை மக்கள் குடிநீருக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலையில், சென்னை ஏரிகளின் நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது. எனவே, சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படாத வகையில் தமிழக அதிகாரிகள் கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடும்படி வலியுறுத்தியுள்ளனர். கண்டலேறு அணையை பொறுத்தவரை, இருமாநில ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும்.

 இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம்தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இருந்ததால் கடந்த மாதம் 6ம்தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் மாதம் 21ம்தேதி முதல் கடந்த பிப்ரவரி மாதம் 6ம்தேதி வரை ஒட்டுமொத்தமாக எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஆந்திர அரசு 8.60 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 இந்நிலையில், தமிழகத்துக்கான தண்ணீரை திறந்து விடும்படி தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், ஆந்திர அதிகாரிகள் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியுள்ளனர்.

Tags : Chennai ,Kandaleru Dam ,AP , Chennai to open drinking water from Kandaleru Dam in May? AP officials informed More about this source text Source text required for additional translation information Send feedback Side panels
× RELATED விஜயவாடாவில் மருத்துவக் கிடங்கில்...