×

500, 1000 கொடுத்தா குறைஞ்சா போய்டுவீங்க...: வைத்திலிங்கத்திற்கு ஆரத்தி எடுக்கும் பெண்கள் கமெண்ட்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் எம்பி போட்டியிடுகிறார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.ராமச்சந்திரனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது, மீண்டும் தனது சொந்த தொகுதியில் போட்டியிடும் வைத்திலிங்கம் வாழ்வா, சாவா என களம் இறங்கியுள்ளார். இதனால் எப்படியும் வெற்றி கனியை பறித்து விட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். தொகுதி முழுவதும் பிரசாரத்திற்கு போகும் இடமெல்லாம் ஆரத்தி எடுக்கும் பெண்கள், பிரசாரத்தில் கூடும் பெண்கள் என அனைவருக்கும் தலா 200 வழங்கி வருகிறாராம்.

ஒரத்தநாடு தொகுதி குளிச்சப்பட்டு கிராமத்தில் திறந்த வாகனத்தில் நின்று வைத்திலிங்கம் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்களை வரிசையாக வரச்சொல்லி வைத்திலிங்கம் முன்னிலையில் ஒருவர் தலா 200 பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தார். இதை அங்கிருந்த போலீசாரும் கண்டுக்கொள்ளவில்லையாம். ஆனால் பணத்தை வாங்கிய பெண்கள், 200 தான் தருவீங்களா? 500, 1000 கொடுத்தா என்ன குறைந்தா போயிடுவீங்க என கமெண்ட் அடித்துக் கொண்டே பணத்தை வாங்கி சென்றனர்.

Tags : Aarti ,Vaithilingam , Politics
× RELATED கோவாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்