×

சொத்து குவிப்பு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு சின்னசேலம் முன்னாள் அதிமுக எம்எல்ஏவுக்கு 4 ஆண்டு சிறை: சொத்துக்களை அரசுடமையாக்கவும் உத்தரவு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (72). இவர் கடந்த 1991-96ம் ஆண்டில், சின்னசேலம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். இந்த காலக்கட்டத்தில் தன்னுடைய பதவியை வைத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 1998ம் ஆண்டு பரமசிவம், அவரது மனைவி பூங்கொடி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ரூ.28.76 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 பின்னர், சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டன. தொடர்ந்து, மீண்டும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் (எம்எல்ஏ, எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்) வழக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி இளவழகன் நேற்று மாலை தீர்ப்பு கூறினார். அதில், பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.33,04,168 அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். அதேபோல், 17.6.1991-13.5.1996 ஆகிய காலங்களில் தன் பெயரிலும், மனைவி, இரண்டு மகன்கள், உறவினர் பெயரிலும் வாங்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பரமசிவம், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags : AIADMK ,Chinnasalem , Chinnasalem ex-AIADMK MLA jailed for 4 years in court
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...