பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு ராஜேஷ் தாஸுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸூக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சிறப்பு டிஜிபி தனக்கு கீழ் பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு டிஜிபிக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.

குறிப்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த மார்ச் 3-ம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாதர் சங்கம், மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் சேர்ந்து தமிழக அரசு உடனடியாக இவரை பணிநீக்கம் செய்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக 27 பேரை கைது செய்து 2 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார். 27 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories:

>