×

வல்லநாடு புதிய பாலத்தில் மீண்டும் பள்ளம்-போக்குவரத்து நெரிசல்

செய்துங்கநல்லூர் : வல்லநாடு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்ட போதே தரமானதாக இல்லை என மக்கள் புகார் கூறி வந்தனர்.இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலத்தில் இடதுபுறம் பள்ளம் விழுந்தது. இதனால் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதன் அருகே வடக்கு பகுதியில் உள்ள மற்றொரு பாலத்தில் ஒரு வழிப்பாதையாக போக்குவரத்து செயல்பட்டு வந்தது.

தெற்கு பகுதியில் பழுதடைந்த பாலம் சுமார் ஒரு வருடத்துக்கு பின் சீர்செய்யப்பட்டு போக்குவரத்துக்கு திருப்பி விடப்பட்டது. ஆனால் பாலம் முறையாக சீரமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் மீண்டும் பாலத்தின் வலது புறம் ஓட்டை விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நெடுஞ்சாலை துறையினர் இந்த பாலம் வழியாக செல்லும் பேருந்துகளை நிறுத்தி அருகில் உள்ள பாலத்தில் ஒரு வழி சாலையாக மாற்றி அமைத்தனர். இந்நிலையில் சேதமடைந்த பாலம் இதுவரை போக்குவரத்து தொடங்காமல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 5 மாதத்திற்கு முன்பு தெற்கு பகுதியில் சேதமடைந்த வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை மத்திய சாலை ஆராய்ச்சி நிலைய நிபுணர் கோயல் தலைமையிலான டெல்லியில் இருந்து வந்த 12பேர் கொண்ட  குழுவினர் பாலத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

 இந்நிலையில் நேற்று ஒரு வழிப்பாதையாக திருப்பி விடப்பட்ட பாலத்தில் இரண்டு இடங்களில் பாலத்தின் நடுப்பகுதியில் திடீரென சேதமடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக வடக்கு பகுதியில் போக்குவரத்து செயல்பாட்டில் இருந்த  பாலத்திலும் தற்காலிகமாக நடுப்பகுதியில் சேதமடைந்துள்ள பாலத்தின் பகுதிகளையும் தடுப்பு வைத்து அடைத்து இருபுறமும் வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுத்தனர்.  

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்லமுடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. உடனடியாக தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பசுமை தமிழ்தலை முறை அமைப்பு தலைவர் கிரிஸ்டோபர் பழுதடைந்த பாலம் குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய தூத்துக்குடி மாவட்ட திட்ட இயக்குனர் சங்கரிடம் தொலைபேசியில் புகாா் தெரிவித்தார். அதற்கு இரண்டாவதாக பழுதடைந்த பாலம் தரமானதாக இருப்பதாகவும் சேதமடைந்த பகுதி சீர் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பாலத்தில் போக்குவரத்து தடைபடாமல் இருக்க முறப்பநாடு போலீசார் பள்ளம் விழுந்த இடத்தில் பேரிகார்டு அமைத்தனர்.

Tags : Vallanad New Bridge , Ceythunganallur: A new bridge has been constructed across the Vallanadu Thamiraparani river. This
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...