லால்குடி தொகுதியில் நலத்திட்ட பணிகளை நிறைவேற்ற உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்-திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன் பிரசாரம்

லால்குடி : லால்குடி தொகுதி திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன், புள்ளம்பாடி ஒன்றிய பகுதியில் பல்வேறு ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தார். அதன்படி புள்ளம்பாடி ஒன்றியம் புதூர்பாளையம் ஊராட்சி வாண்டராம்பாளையம், கோவண்டகுறிச்சி, வடுகர்பேட்டை, ஆலம்பாக்கம், திண்ணக்குளம், விரகாலூர், ஆலம்பாடி, தங்கசாலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

கோவண்டக்குறிச்சி ஊராட்சியில் மாட்டு வண்டியில் சென்று விவசாயிகளிடம் வாக்கு சேகரித்து பேசுகையில், விவசாயிகளின் நிலங்களை பாதுகாக்கவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மத்திய அரசிடமிருந்தும், கார்ப்பரேட் கம்பெனியிடமும் இருந்து விவசாயிகளை மீட்கவும், நமது தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறைவேற்றவும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

காங்கிரஸ் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர் செல்வராசா, ஒன்றிய சேர்மன் ரசியா கோல்டன் ராஜேந்திரன், முன்னாள் சேர்மன் பத்மா மருதை, பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், இளங்கோவன், கோவண்டகுறிச்சி வக்கீல் சேவியர் பங்கேற்றனர்.

Related Stories:

More