ஏலகிரி மலையில் இரவு நேரத்தில் திகில் பயணம் 14 கொண்டை ஊசி வளைவுகளில் மின்விளக்கு அமைக்க வேண்டும்-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை :  ஏலகிரி மலையில் இரவு நேரத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திகில் பயணம் மேற்கொள்வதால் மாவட்ட நிர்வாகம் 14 கொண்டை ஊசி வளைவு சாலைகள் முழுவதும் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் இங்கு 14 கிராமங்களை உள்ளடக்கி இது ஒரு தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும் இங்குள்ள மலைவாழ் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம், பால் உற்பத்தி வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தை பெருகி வருகின்றனர். மேலும் எந்தக் காலத்திலும் ஒரே மாதிரியான சீதோசன நிலை நிலவுவதால் இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. அப்போது பல்வேறு மலர் கண்காட்சி, காய்கறி வகைகள், வனத்துறை பொருட்கள் உட்பட துறை சார்ந்து பல்வேறு உற்பத்திப் பொருட்களும் வியாபாரப் பொருட்கள் பொதுமக்களின் கண்காட்சிக்கும் விழிப்புணர்வுக்காகவும் வைக்கப்படுகிறது.

இந்த மலை சாலையானது 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட சாலைகளாக உள்ளது. மேலும், இயற்கை அழகை ரசிப்பதற்காக வெளியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இரவு நேரம் காத்திருந்து கண்டு செல்கின்றனர்.  இதனால் மது போதையில் இருக்கும் சமூக விரோதிகள் சிலர் இரவில் வரும் நபர்களை கண்காணித்து அவர்களிடம் மிரட்டி பணம் பொருட்களை பறித்து செல்வதும், வேலை முடித்து வரும் நபர்களை வழிமறித்து மிரட்டி பணம் பறித்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொதுமக்களும் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் இரவு நேரத்தில் மலையைக் கடந்து செல்லவும், மலைக்கு வரவும் திகில் பயணம் மேற்கொள்கின்றனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம் மலையடிவாரத்திலிருந்து ஏலகிரி மலையில் உள்ள முத்தானூர் வரை 14 கொண்டை ஊசி வளைவுகளின் சாலைகளில் மின்கம்பங்கள் அமைத்து சாலை முழுவதும் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும், சமூக விரோதிகளால் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>