×

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டியளித்துள்ளார். தேர்தலில் 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்களின் எண்ணிக்கை 1,14,205. வி.வி.பேட் இயந்திரங்களின் எண்ணிக்கை 1,20,807. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 88,947 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி துவங்கிவிட்டதாக சாகு பேட்டியளித்துள்ளார். அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கி வருகிறார்கள். இந்த ஆண்டு புகைப்படம் இல்லாமல் பூத் சிலிப் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Tags : Chief Electoral Officer ,Tamil ,Nadu , Chief Electoral Officer of Tamil Nadu
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்