நீடாமங்கலத்தில் பஸ் நிலையம், நிழற்குடை இல்லை-3 இடத்தில் நிற்கும் பஸ் நிறுத்தத்தில் வெட்டவெளியில் பயணிகள் அவதி

*மக்களின் குரல்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் ஒரு முக்கியமான தாலுகாவாக உள்ளது. இவ்வூரில் உள்ள பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. நீடாமங்கலத்தை சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் நீடாமங்கலம் வந்துதான் வெளியூர் செல்ல வேண்டும். அதே போன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீடாமங்கலம் வந்துதான் தஞ்சை, திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு படிக்க செல்ல வேண்டியுள்ளது.

அதுமட்டுமின்றி நீடாமங்கலம் வழியாக நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நீடாமங்கலம் தாலுகா தலைநகரமான, ஊரில் அரசு மருத்துவமனை, 2 மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி, ஒன்றியம், பேரூராட்சி, தாலுகா அலுவலகம், 2 அரசு தொடக்கப்பள்ளி, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், கருவூலம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், ரயில் நிலையம், இவ்வளவு இருந்தும் மாணவர்கள், பொதுமக்கள், வணிகர்கள், அலுவலர்கள் ஆகியோர், பயன்பாட்டிற்கு நீடாமங்கலத்தில் ஒரு பஸ் நிலையம் இல்லை. மக்கள் மாணவிகள் மழை மற்றும் வெயில் நேரத்தில் நின்று செல்ல 3 இடத்தில் பேருந்து நிற்கிறது.

ஒரு இடத்தில் கூட பயணிகள் நிழற்குடை இல்லை. இதுபற்றி அரசுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ எந்த கவலையும் இல்லை. எனவே நீடாமங்கலத்தில் பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள் பயன்பெறும் நிலையில் பஸ் நிலையம் மற்றும் பயணிகள் நிழற்குடை வைக்க வேண்டும் என நீடாமங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: