தமிழகம் மாளிகை பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் வண்ண மலர்கள்

ஊட்டி : ஊட்டி தமிழகம் ஆய்வு மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் கோடை சீசனை முன்னிட்டு நடவு செய்யப்பட்ட செடிகளில் வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாத்தலங்கள் நிறைந்த மாவட்டமாக விளங்கி வருகிறது.

இங்கு தோட்டக்கலைத் துறை கட்டுபாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்டவைகள் உள்ளன.  கோடை சீசனின் போது வர கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு இப்பூங்காக்களில் பல்வேறு வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படும்.

இதேபோல் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகை பூங்காவிலும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை சீசனை முன்னிட்டு மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை சீசனுக்காக தமிழகம் மாளிகை பூங்கா, கண்ணாடி மாளிகை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. கண்ணாடி மாளிகையில் நடவு செய்யப்பட்டுள்ள டெலியா, பால்சம், ஆந்துரியம் உள்ளிட்ட பல்வேறு வகை செடிகள் தற்போது பூத்து குலுங்குகின்றன. இதுதவிர பல்வேறு வகை கள்ளி செடிகளும் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

Related Stories:

>