கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தபால் வாக்கு வழங்க வேண்டும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

சென்னை: கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தபால் வாக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என்று ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சத்தால் கடைசி நேரத்தில் பெரும்பாலான வாக்காளர்கள் வாக்குச்சாவடி வருவதை தவிர்ப்பார்கள். கடைசி நேரத்தில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதை தவிர்த்தால் வாக்குப்பதிவு அதிகம் குறைய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க கொரோனா நோயாளிகளுக்கு தபால் வாக்குகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>