பாஜக - அதிமுக கூட்டணிக்கும் எதிரான போர்தான் இத்தேர்தல்; மொத்த தமிழகமும் திமுக ஆட்சியை எதிர்பார்க்கிறது : மு.க.ஸ்டாலின் ட்வீட்!!

சென்னை : சேலத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழ் மண் - பண்பாடு - தனித்தன்மை மீது படையெடுக்கும் பாஜகவுக்கும், அதற்கு எல்லா வகையிலும் அடிமையாக துணை நிற்கும் அதிமுக கூட்டணிக்கும் எதிரான போர்தான் இத்தேர்தல்.

தமிழர்களின் அரசியல் தெளிவு மே 2 முடிவுகளில் தெரியும்.

திமுக கூட்டணி வெல்லும்; தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காக்கும்!” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு ட்விட்டர் பதிவில்,எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளருடன் நடந்து சென்று வாக்காளர்களிடம் ஆதரவு கோரினேன்.

மக்களின் ஆதரவும் ஆர்ப்பரிப்பும் திமுகவின் வெற்றியை உறுதி செய்கிறது.

எடப்பாடி மட்டும் இல்லை; மொத்த தமிழகமும் திமுக ஆட்சியை எதிர்பார்க்கிறது.

எதிர்பார்ப்பு நிறைவேறும்; தமிழகம் வளம் பெறும்!, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: