×

நான் சித்தி.. அவரு சித்தப்பா

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் சமக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து அல்லம்பட்டி பகுதியில் ராதிகா பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘‘மக்கள் விலை போகாமல், சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழக அரசு வைத்துள்ள கடனை எப்படி தீர்க்க போகிறோம் என தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள மந்திரிகளிடம் லஞ்சம் வாங்கினியா? ஊழல் செய்தாயா என கேட்டால், இல்லை என்று ஒருவர் கூட சொல்லமுடியாது. நகர, கிராம மக்கள் தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வந்துள்ளோம். உங்களுக்கு நான் சித்தி, அவர் சித்தப்பா. காஸ், காய்கறி விலை ஏறிப்போனது ஓட்டுபோடும் போது மனசுல வரும்...’ என்று பேசிக்கொண்டே போனார்.

Tags : Sidappa , I am Siddi .. he is Siddhappa
× RELATED உத்தரபிரதேசத்தில் குடும்ப சண்டையை...