தேமுதிகவுக்கு மக்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை: விஜய பிரபாகரன் சாடல்

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி அமைக்க சீட் பேரம் பேசும் தேமுதிக இந்த முறை தனித்து விடப்பட்டது. மலைபோல் நம்பிய அதிமுக இவர்கள் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை பார்த்து மலைத்துப்போய் கழற்றிவிட்டுவிட்டது. தனித்து போட்டியிடப்போவதாக கூறிய அக்கட்சி கடைசியில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பிரசாரம் செய்து வருகிறார். நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து, விஜய பிரபாகரன் பிரசாரம் செய்தபோது பேசியதாவது: ‘‘கடந்த 40 ஆண்டாக மக்களுக்காக செலவு செய்து வருகிற ஒரே தலைவர்  விஜயகாந்த் தான்.

தேமுதிகவை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. அதிமுகவின்  துரோகத்தால் மக்களுக்காக உருவானது தான் அமமுக-தேமுதிக கூட்டணி.  தேமுதிகவுக்கு மக்கள் சரியான  அங்கீகாரம் அளிக்கவில்லை. எங்கள் கூட்டணியினர் மட்டும் தான், மக்கள் பிரச்னையை பற்றி பேசுகிறோம். உடல்நிலை சரியில்லாத போதும் எனது தந்தை விஜயகாந்த், பிரசாரம்  செய்து வருகிறார். ஒரு இலவசத்துக்கு பின்னால் ஆயிரக்கணக்கான ஊழல்கள் உள்ளது.  மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார்.

Related Stories: