மயாமி ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் குவித்தோவா

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் 4வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீராங்கனை பெத்ரா குவித்தோவா (செக்.) தகுதி பெற்றார். 3வது சுற்றில் இங்கிலாந்தின் ஜோகன்னா கோன்டாவுடன் நேற்று மோதிய குவித்தோவா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஜெலினா ஆஸ்டபென்கோவை (லாத்வியா) வீழ்த்தினார்.

ருமேனியாவின் சிமோனா ஹாலெப் காயம் காரணமாக விலகியதை அடுத்து, லாத்வியாவின் அனஸ்டேசியா செவஸ்டோவா 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரென்கா தனது 3வது சுற்றில் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னணி வீராங்கனைகள் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), அரினா சபலென்கா (பெலாரஸ்), மார்கெடா வோண்ட்ருசோவா (செக்.) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories:

>