உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் டிரேப் பிரிவில் இந்தியாவுக்கு 2 தங்கம்

புதுடெல்லி: ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் டிரேப் குழு போட்டிகளில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது. பைனலில் கஜகஸ்தான் அணியுடன் மோதிய பிரித்விராஜ் தொண்டைமான், லக்‌ஷய் ஷியோரன், கைனன் செனாய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி 6-4 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. மகளிர் டிரேப் குழு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ராஜேஷ்வரி குமாரி, மனிஷா கீர், ஷ்ரேயாசி சிங் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு முதலிடம் பிடித்தனர். பதக்க வேட்டையில் ஆதிக்கம்: உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 15 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை அள்ளி முதலிடம் பிடித்தது. அமெரிக்கா 4 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது. இத்தாலி (2-0-2), டென்மார்க் (2-0-1), போலந்து (1-3-3) அணிகள் டாப்-5ல் இடம் பிடித்தன.

Related Stories:

>