மத்திய உளவுத்துறை உதவி ஐ.ஜிக்கு கொரோனா

சென்னை: மத்திய உளவுத்துறை உதவி ஐஜி கணேசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தமிழகம் முழுவதுமே இம்மாதம் ஆரம்பத்தில் இருந்தே கொரோனா பரவல் என்பது அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், தினம் தோறும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில், மத்திய உளவுத்துறை உதவி ஐஜி கணேசனுக்கு(56) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக லேசான இருமல், சளி, காய்ச்சல் போன்ற கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தநிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Related Stories:

>