தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மேலும் 41 கம்பெனி துணை ராணுவம் வருகை

சென்னை: சட்டமன்ற தேர்தல் பணிக்காக 5 சிறப்பு ரயில்களில் 41 கம்பெனி துணை ராணுவ படையினர் சென்னை வந்தடைந்தனர். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்புக்காக 235 கம்பெனி துணை ராணுப் படையினர் தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். இதில், ஏற்கனவே, 65 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை அகர்தலா (00282) ரயிலில் 10 துணை ராணுவ கம்பெனிகள், ஜெய்ப்பூரில் இருந்து வந்த ரயில் (00290) 8 துணை ராணுவ கம்பெனிகள், குவாலியர்- சென்ட்ரல் வந்த ரயில் (00285)  10 துணை ராணுவம், குவாலியர்- சேலம் வந்த ரயில் (00296) 5 துணை ராணுவ கம்பெனிகள், சாம்பல்பூரில் இருந்து சென்ட்ரல் வந்த (00309) 8 துணை ராணுவ கம்பெனிகள் என பல்வேறு பகுதிகளில் இருந்து 5 சிறப்பு ரயில்களில் 41 துணை ராணுவ படையினர் சென்னை வந்தடைந்தனர். இதையடுத்து அவர்கள் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories:

>