அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணன் கல்லூரியில் பறக்கும் படையினர் சோதனையில் 650 பித்தளை பாத்திரம் பறிமுதல்

திருச்சி: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணன் உதயகுமார் புதுக்கோட்டை மாவட்ட இலுப்பூரில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் வீரபாண்டி(32) என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ₹50 லட்சம் பணம், கோடி கணக்கில் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு சொந்தமான கல்லூரியில் பறக்கும் படையினர் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். இலுப்பூர் அருகே உள்ள இந்த கல்வி நிலையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டபாணி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் இரண்டு குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது 13 மூட்டைகளில் 650 பித்தளை பொங்கல் பானைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: