×

போச்சம்பள்ளி பகுதியில் சாலையோர செடி-கொடிகளுக்கு தீ வைக்கும் மர்ம நபர்கள்: விபத்து அபாயத்தால் மக்கள் பீதி

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி பகுதியில் சாலையோரம் காய்ந்து கிடக்கும் செடி-கொடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை துவங்கியது முதலே, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதி 96 டிகிரி பாரன்ஹீட்டான பதிவான வெயில் அளவு, 6ம் தேதி 98 டிகிரி பாரன்ஹீட்டாக அதிகரித்தது. கடும் வெயில் வாட்டியெடுத்து வருவதால், விவசாய நிலங்கள் மட்டுமின்றி சாலையோரம் உள்ள இலை, தழை மற்றும் செடி கொடிகளும் காய்ந்து சருகாகி வருகின்றன. இந்நிலையில், சாலையில் செல்வோர் சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் வீசி செல்வதால், காய்ந்து கிடக்கும் செடி கொடிகள் தீப்பற்றி எரிவது வாடிக்கையாக உள்ளது. இந்த தீயை அணைக்காமல் விடுவதால் பல மீட்டர் தொலைவிற்கு பரவி வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தற்போது கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், சாலையோர இலை, தழைகள் மற்றும் செடி-கொடிகள் காய்ந்து போய் காணப்படுகிறது. அதன் மீது சிகரெட் துண்டுகளை அணைக்காமல் வீசி செல்வதால், தீப்பற்றி கொளுந்து விட்டு எரிகிறது. அதனை சரியாக அணைக்காமல் விடுவதால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் தீ பரவும் அபாயம் உள்ளது. போச்சம்பள்ளியில் இருந்து சந்தூர் செல்லும் வழியில், சாலையின் இருமடங்கிலும் காய்ந்து கிடக்கும் செடி -கொடிகளுக்கு தீ வைப்பது வழக்கமாக உள்ளது. விடிய விடிய தீப்பிடித்து எரிவதால், குடியிருப்பு பகுதிக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தீ தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்,’ என்றனர்.

Tags : Pochampally , Pochampally area, plant-flag, fire, mysterious persons
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...