ஓபிஎஸ்சை தெரியும்... இபிஎஸ்சை யாருக்கும் தெரியாது: சிஆர் சரஸ்வதி கிண்டல்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜை ஆதரித்து அமமுக செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி மன்னார்குடியில் நேற்று பேசியதாவது: உலகத்திலேயே முட்டி போட்டு முதல்வர் ஆன பெருமை எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமே சாரும். ஓ.பன்னீர்செல்வத்தை எல்லோருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமியை யாருக்காவது தெரியுமா? சொந்த ஊரிலேயே எடப்பாடியை யாருக்கும் தெரியாது. உங்களுக்கு இந்த பதவியையும் கட்சியையும் பிச்சையாக போட்டவர் சசிகலா. அதிமுக தேர்தல் அறிக்கையில், மாதம் ரூ.1500, 6 சிலிண்டர் கொடுப்போம் என சொல்கிறீர்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாயும், புழுத்து போன ரேசன் அரிசி 5 கிலோவும் கொடுத்தீங்க. ஒரு குடும்பத்திற்கு ரூ.1,500 கொடுத்தால் மாதம் ரூ.40 ஆயிரம் கோடி வேணும். இதற்கு என்ன பண்ண போறீங்க. தமிழகத்தில் எத்தனை தொழிற்சாலை உள்ளது. எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்தீங்க? இதற்கு இந்த தேர்தலில் வாக்காளர்களே நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

Related Stories: