தொகுதிக்கு பணம் வராததால் விரக்தி பிரசாரத்தில் பின்வாங்கிய அமமுக வேட்பாளர்கள்

அமமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றது. இதில், அமமுக மட்டும் 161 தொகுதிகளில் களம் காண்கிறது. இந்தநிலையில், வெற்றி வாய்ப்புக்கு ஏற்றவாறு தொகுதிகளை 3ஆக பிரித்து பணம் ஒதுக்க டிடிவி.தினகரன் நடவடிக்கை மேற்கொண்டார். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளுக்கு ரூ.5 கோடி, 50 சதவீதம் மட்டுமே வெற்றி வாய்ப்புள்ள தொகுதிக்கு ரூ.3 கோடியும், வெற்றி வாய்ப்பு குறைவான தொகுதிக்கு ரூ.2 கோடியும் என ஒதுக்கப்படும் என வேட்பாளர்களுக்கு டிடிவி.தினகரன் தெரிவித்திருந்தார். ஆனால், வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளுக்கு மட்டுமே ரூ.5 கோடியை டிடிவி.தினகரன் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, டிடிவி.தினகரன் வேட்பாளராக போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் மட்டும் ரூ.50 கோடி வரையில் செலவு செய்யயப்பட்டு வருகிறதாம். இதனால், விரக்தியில் உள்ள வேட்பாளர்கள் பலரும் தலைமைக்கு இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

ஆனால், டிடிவி.தினகரன் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. தலைமை பணம் தராமல் எப்படி தேர்தலை சந்திப்பது எனவும் கடிந்துள்ளனர். இதனால், விரக்தியின் உச்சத்தில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் பிரசாரங்களை மேற்கொள்ளாமல் பின்வாங்கியுள்ளனராம். இதேபோல், கூட்டணி கட்சியினரும் ஓட்டு கேட்க செல்லும்போது உடன் வருவதில்லையாம். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் வேட்பாளரை நிறுத்த வேண்டியது தானே. எங்களுக்கு ஏன் செலவு வைக்க வேண்டும் என வேட்பாளர்கள் குமுறுகின்றனர்.

Related Stories:

>