மயிலாப்பூர் தொகுதிக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு

1மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது? நான் 25 வருடமாக மயிலாப்பூரில் மக்கள் பணியில் இருக்கிறேன். மக்களிடமும், தொண்டர்களிடமும் மிகுந்த மகிழ்ச்சியும், எழுச்சியும் காணப்படுகிறது. 20 வருடமாக மயிலாப்பூர் தொகுதி ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினரை பார்க்கவில்லை. அதனால், சட்டமன்ற உறுப்பினரின் பணி என்ன என்பதே மயிலை தொகுதி மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்றாலும் அரசு இயந்திரம் செயல்படும். எனவே, ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் வந்தால் மக்களோடு மக்களாக பழகுவார்கள் என இத்தொகுதி மக்கள் நினைக்கிறார்கள். 2அதிமுக வேட்பாளர் நட்ராஜன் 5 வருடமாக எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். மயிலாப்பூர் தொகுதிக்கென்று அவர் என்ன செய்திருக்கிறார்?

சட்டமன்ற உறுப்பினர் பணி என்பது  மக்களிடம் நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து  வைப்பது தான். ஆனால், இது இங்கு நடக்கவில்லை. ஒரு அரசு இயந்திரம் என்ன செய்யுமோ அதை மட்டுமே அவர் இந்த தொகுதிக்கு செய்திருக்கிறார். ஒரு சட்டமன்ற உறுப்பினராக இந்த தொகுதிக்கு அவர் எதுவும் செய்யவில்லை. 3மயிலாப்பூர் தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்ற என்ன திட்டங்களை வைத்துள்ளீர்கள்? மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய், கொரோனா பாதிப்பு காரணமாக ரேசன் கார்டுக்கு ரூ.4 ஆயிரம், சிலிண்டருக்கு ரூ.100 மானியம், சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் அரசு மானியம் உள்ளிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் தொகுதி மக்களுக்கு பெற்றுத்தருவேன்.

 அதுபோக, குடிநீர் பிரச்னை, கழிவுநீர் கால்வாய் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து சென்னையில் சிறந்த தொகுதியாக மயிலாப்பூரை மாற்றி காட்டுவதே என்னுடைய பணியாக இருக்கும்.   

4திமுக-அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? திமுக தேர்தல் அறிக்கை என்பது சொன்னதை செய்வார்கள் செய்வதை தான் சொல்வார்கள் என்பதை மக்கள் முழுமையாக புரிந்துவைத்துள்ளார்கள். அதிமுக தேர்தல் அறிக்கை என்பது திமுகவின் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்த அறிக்கையாக தான் மக்கள் பார்க்கிறார்கள்.

Related Stories:

>