பருவநிலை மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் அழைப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த மாதம் காணொலி மூலம் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி உள்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில், ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு காணொலி மூலம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில்,. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்தாண்டு நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்துக்கான முன்னோட்டமாக இந்த உச்சி மாநாடு அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில்  இருந்து பிரதமர் மோடியை தவிர்த்து, வங்கதேச பிரதமர் ஷேய்க் ஹசீனா, பூடான்  பிரதமர் லோடே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் தரிசனம்?

பிரதமர்  மோடி ஏப்ரல் 2ம் தேதி கேரளாவில் பிரசாரம் ேமற்கொள்கிறார். அப்போது அவர்  சபரிமலையில் தரிசனம் ெசய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.  கேரளாவில்  ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. கேரள சட்டமன்ற  தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக  கூட்டணி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல்  2ம் ேததி பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் பிரசாரம் செய்கிறார். அன்று  பத்தனம்திட்டா ேகான்னியில் நடக்கும் தேர்தல் பிரசார பேரணியில்  மோடி பங்கேற்கிறார். ேகரளா வரும் பிரதமர் சபரிமலை கோயிலுக்கு  சென்று தரிசனம் செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 

பாதுகாப்பு  பிரச்னைகள் இல்லாவிட்டால் பிரதமர் சபரிமலைக்கு வருகை தர விரும்புவதாக,  கேரளாவில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.  ஹெலிகாப்டரில் செல்வதால் ஏற்படும் சிரமங்கள் குறித்து பிரதமர்  அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரதமரின் சபரிமலை  கோயில் வருகை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Related Stories:

>