நாகையில் கோயில், கோயிலாக சசிகலா சுவாமி தரிசனம்

நாகை: சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா நேற்று திடீரென, நாகூர் நாகநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். அங்கு 45 நிமிடம் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது நாகநாத சுவாமி கோயிலில் உள்ள ராகு, கேது சன்னதியில் நடந்த சர்ப்பசாந்தி ராகு பரிகார தோஷ நிவர்த்தி பூஜையில் கலந்து கொண்டார்.

இதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வேளாங்கண்ணி பேராலயம் சென்றார். அங்கு சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகூர் தர்கா வந்தார். அங்கு சிறப்பு துவா ஓதி வழிபாடு செய்தார். இதன்பின்னர் சசிகலாவிடம் நிருபர்கள் சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என நிருபர்கள் கேட்டதற்கு பதில் கூறாமல் மவுனமாக சென்றார்.

Related Stories:

>