பாஜ மூலம் கஷ்டங்களை கொடுத்தார்: ஜெயலலிதா மரணத்திற்கு ஓபிஎஸ்சே காரணம்: போடி அமமுக வேட்பாளர் பகீர்

தேனி: தேனி மாவட்டம், போடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், அமமுக சார்பில் முத்துச்சாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அமமுக வேட்பாளராக போட்டியிடும் முத்துச்சாமி, ஓபிஎஸ்சை பற்றியே அதிகம் விமர்சித்து பேசி வருகிறார்.

முத்துச்சாமி தனது பிரசாரத்தில், ‘‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்தான் அவரது மரணத்திற்கு காரணம். பாஜவுடன் உறவு வைத்துக்கொண்டு ஜெயலலிதா, சசிகலாவுக்கு கஷ்டங்களை கொடுத்தார். டிடிவி.தினகரன், சசிகலா மூலம் ஜெயலலிதாவிடம் அறிமுகமாகி, உயர் பதவிக்கு வந்து ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் துரோகம் செய்தவர் ஓபிஎஸ். எனவே, அவரை தோல்வியடையச் செய்ய வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>