மோடி பிரசாரம் செய்தால் அதிமுக கூட்டணி 234 தொகுதியிலும் தோற்கும்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை: தமிழகத்தில் பிரதமர் மோடி தொகுதியில் பிரசாரம் செய்தால், அதிமுக கூட்டணி 234 –குதியிலும் படுதோல்வி அடையும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பெரவள்ளூர் சதுக்கம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில்,

‘தேர்தல் நெருங்க நெருங்க அதிமுக, பாஜ கூட்டணி கடையாணி கழன்ற கட்டை வண்டியாக மாறி வருகிறது. தற்போது இருக்கின்ற எங்கள் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற கூட்டணி. தற்போது அதிமுகவினர் எதிர்க்கட்சியாககூட ஆகமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ், வேலுமணி ஆகியோரால் அவர்களது தொகுதிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மோடியும் எடப்பாடியும்தான் காரணம். இதனால்தான் மோடி படத்தை தூக்கி சென்று வாக்கு கேட்க அதிமுகவினர் தயங்குகின்றனர். தமிழகத்தில் மோடியை அழைத்து வந்து தெரு தெருவாக பிரசாரம் செய்தால் நாங்கள் பிரசாரம் செய்ய தேவையில்லை. அதிமுக கூட்டணியில் 234 தொகுதியும் காலியாகி விடும்.

Related Stories:

>