சச்சினுக்கு கொரோனா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. சிறிய அறிகுறிகள் இருப்பதால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. ஆனாலும், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என தகவல் பதிந்துள்ளார். சமீபத்தில் நடந்த சாலை விழிப்புணர்வு டி20 தொடரில் இந்திய லெஜண்ட்ஸ் அணியின் கேப்டனாக சச்சின் விளையாடியதும், அந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: