மயாமி ஓபன் டென்னிஸ்: ஒசாகா முன்னேற்றம்

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் 3வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் அஜ்லா டாம்ஜனோவிச்சுடன் (ஆஸி.) நேற்று மோதிய ஒசாகா 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். முன்னணி வீராங்கனைகள் அனெட் கோன்டாவெய்ட் (எஸ்டோனியா), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா), மரியா சக்கரி (கிரீஸ்), கரோலினா பிளிஸ்கோவா (செக்.), கார்பினி முகுருஸா (ஸ்பெயின்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories:

>