×

செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இரும்பு கம்பிகள் விலை ஏற்றம், விசாரணை கோரி வழக்கு: சிபிஐக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: கோயம்புத்தூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், இரும்புக் கம்பிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கம்பிகள் கிடைப்பதில் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலைக்கு கம்பிகளை விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் கட்டுமான துறையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய சிபிஐ.,யிடம் மார்ச் 6ம் தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்கள் புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எஸ்.துரைசாமி, இளங்கோவன் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 2 வாரத்தில் பதிலளிக்கும்படி, சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

Tags : Ironclad ,CBI , Iron rods
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...