ரெய்டுகளால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க சோதனைக்கான சான்று அளிக்க வேண்டும்: தமிழக தேர்தல் அதிகாரிக்கு டி.ஆர்.பாலு கோரிக்கை

சென்னை: தமிழக தேர்தல் அதிகாரிக்கு ஆன்லைன் மூலம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: ‘லயோலா கல்லூரி அருகே இன்று(நேற்று) காலை 6.50 மணி எனது காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். மீண்டும் காலை 9.10 மணி அளவில் மதுரவாயல் அருகே போக்குவரத்து நெரிசல் நேரத்தில் எனது கார் சோதனையிடப்பட்டது. எனது காரில் நட்சத்திர பேச்சாளர் ஸ்டிக்கரும், எம்பிக்கான ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. ஆனாலும், காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதை நான் அனுமதிக்க செய்தேன். அவர்களது பணியை நான் பாராட்டுகிறேன். ஆனால், அதே வேளையில் அவர்களது செயலை நான் கண்டித்து, உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். ஒரே காரைக் குறுகிய இடைவெளியில் 2 முறை சோதிப்பது என்பது நேரம் விரயம் தான் ஏற்படும். குறைந்தபட்சம் சோதனையிட்டு எதுவும் இல்லை என்றால் பரிசோதிக்கப்பட்டது என்று சான்றிதழாவது வழங்கலாம். ஆகவே, இதுபோன்ற சம்பவங்களை கணக்கில் எடுத்து கொண்டு உரிய வழிகாட்டுதலை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More