சென்னை பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார்

சென்னை: வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து சென்னை அடையாறில் நாளை காலை பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் ராகுல்காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒரு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவர் காலை 11 மணிக்கு வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து சென்னை அடையாறு தொலைபேசி இணைப்பகம் அருகே நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்ேகற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகிக்கிறார். இதில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,சென்னை தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும் மாவட்ட தலைவர் அடையாறு டி.துரை, சிபிஎம் பாக்கியம், சிபிஐ எஸ்.ஏழுமலை, மதிமுக மாவட்ட செயலாளர் கழக குமார், விசிக பி.ரவிசங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பூவை முஸ்தபா, மனித நேய மக்கள் கட்சி பனையூர் முகமது யூசுப் ஆகியோர் பேசுகின்றனர்.

Related Stories: