சுயஉதவி குழுவுக்கு ஒரு லட்சம் கடன்: கரிகாலன் வாக்கு சேகரிப்பு

தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கரிகாலன் நேற்று கிழக்கு தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘நான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக முடிக்கப்படும். பொதுமக்களின் வசதிக்காக மேற்கு தாம்பரத்தில் உள்ளது போல் கிழக்கு தாம்பரத்திலும் ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்கப்படும். நீர்நிலைகளை பாதுக்காப்பாதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், அமமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள மகளிர் - ஆடவர் சுய உதவி குழுக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லா கடன் வழங்க நடவடிக்கை எடுப்பேன்,’ என்றார்.

பிரசாரத்தின்போது, அமமுக செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கோரல் வெங்கடேசன், ஆர்.ஜி.ஏழுமலை, முன்னாள் கவுன்சிலர் உஷா ஏழுமலை, தேமுதிக தாம்பரம் நகர செயலாளர் செழியன், அமமுகவை சேர்ந்த சதீஷ், ஜான்சன் உட்பட அமமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories:

>