சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுதந்திர தின வைர விழா புகைப்பட கண்காட்சி

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுதந்திர தின வைர விழா புகைப்பட கண்காட்சியை நேற்று சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சச்சின் புனிதே துவக்கி வைத்தார். நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி 75வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சுதந்திர தின வைர விழாவாக கொண்டாட ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி அனைத்து ரயில் நிலையங்களிலும், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அவர்களது வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையிலும் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சுதந்திர தின வைர விழா புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது. இதனை சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சச்சின் புனிதே ரிப்பன் வெட்டி  துவக்கி வைத்து புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் ரயில்நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் ஆர்வத்துடன் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.

Related Stories:

>