×

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள லஷ்கர்கா நகரில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் உயிரிழப்பு

காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள லஷ்கர்கா நகரில் இன்று தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். இந்த திடீர் தாக்குதலில் சாங்கின் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் முகமது சர்வாரி உள்பட 10 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 270 பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் பிப்ரவரியில் நாடு முழுவதும் நடந்த பல்வேறு தாக்குதல்  சம்பவங்களில் கொல்லப்பட்டனர் மற்றும் 173 பேர் காயமடைந்தனர். பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானில்  சாலையோர வெடிகுண்டு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தலிபான் தாக்குதல்கள் உள்ளிட்ட 166 சம்பவங்கள் நடந்து உள்ளன. ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கர அமைப்பு உள்நாட்டு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது.

மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க ஆப்கானிஸ்தான் அரசுப்படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் அரசு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 10 போலீசார் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் சிலரும் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Taliban ,Lashgarka ,Afghanistan ,Helmand , In Afghanistan, 10 policemen were killed in an attack by the Taliban
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை