×

தெருவில் தேங்கும் கழிவுநீர் சின்னமனூரில் மக்களுக்கு சுகாதாரக்கேடு

சின்னமனூர் : சின்னமனூரில் உள்ள 9வது வார்டில் பாதாளச் சாக்கடை உடைந்து தெருவில் கழிவுநீர் தேங்குவதால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.  சின்னமனூரில் 9வது வார்டு தேரடி தெருவில் காவல்நிலையம், சர்ச் கோயில், நகராட்சி துவக்கப்பள்ளி, வணிக வளாக கடைகள் என கட்டிடங்கள் அடுத்தடுத்து உள்ளன.

இதில் தேரடி பகுதி மெயின் வீதியில் பாதாள சாக்கடை உடைந்து கழிவுநீர் வெளியேறி, வாறுகாலில் நிரம்பி பெரும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சாலையின் குறுக்கே வாறுகால் உடைத்து விட்டதால், அதை சீரமைக்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

கடைகளில் உட்கார முடியவிலை என உரிமையாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் சின்னமனூர் நகராட்சியில் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும் நடவடிக் கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். எனவே, சின்னமனூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்க விடுத்துள்ளனர்.

Tags : Chinmanur , Cinnamanur: In the 9th ward of Cinnamanur, the underground sewer broke and sewage stagnated in the street, causing ill health to the public.
× RELATED சின்னமனூரில் கால்வாய் பாதை...