கொளத்தூர் ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னை தீர நடவடிக்கை எடுப்பேன்-திமுக வேட்பாளர் சீனிவாச பெருமாள் உறுதி

மேட்டூர்: மேட்டூர் சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளர் சீனிவாசபெருமாள், நேற்று கொளத்தூர் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தின்னப்பட்டி ஊராட்சி, மூலக்காடு ஊராட்சி, சேத்துக்குளி, புதுவேலை, மங்கலம் உட்பட 32 கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த ஊராட்சிகளை சேர்ந்த மக்கள், குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக புகார் தெரிவித்தனர். நான் வெற்றி பெற்றவுடன் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாகப் போக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

பின்னர், கொளத்தூர் வெள்ளி சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். கிராமங்களில் வீடுகளுக்குச் சென்று திண்ணையில் அமர்ந்து, திமுக தேர்தல் வாக்குறுதிகளை விளக்கிக் கூறி, மூதாட்டிகளிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக நடந்து சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்து, குறைகளை தீர்ப்பதாக உறுதி அளித்தார். பிரசாரத்தின்போது, கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி உடனிருந்தார்.

Related Stories:

>