×

தெலங்கானாவிலிருந்து ஆந்திராவிற்கு அரசு பஸ்சில் கடத்திய ₹6 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

திருமலை : ஆந்திர மாநிலம், கர்னூல் டிஎஸ்பி மகேஷ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கர்னூல் பஞ்சலிங்கலா சுங்கச்சாவடியில் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விக்ரம் சிம்ஹா, சிறப்பு தனிப்படை இன்ஸ்பெக்டர் லட்சுமி துர்கய்யா மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சோதனை செய்தனர். அப்போது, தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து ஆந்திராவுக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகள் போலீசார் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் உரிய ஆவணமின்றி 148 கிலோ எடை கொண்ட ₹6.86 கோடி தங்க கட்டிகள் இருந்தது. இதையடுத்து, போலீசார் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடப்பா மாவட்டம், ரயில்வே கொண்டாபுரம் தாலா புரோதட்டூரை சேர்ந்த  ராஜாவை கைது செய்து, விசாரனை நடத்தினர்.  

இதில் அவர் கூறுகையில், ‘தாடிபத்திரி மெயின் பஜாரில் உள்ள அம்பதி புல்லாரெட்டி ஜுவல்லர்சில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த 24ம் தேதி உரிமையாளர் சென்னபடி  ஐதராபாத்தில்  அபிட்ஸில் உள்ள மனோ கமனா தங்கக் கடையிலிருந்து தலா 100 கிராம்  எடையால் 163 தங்க கட்டிகள் பெற்றார். அவற்றில் 15 தங்க கட்டிகள் ஐதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கினார். மீதமுள்ள 148 தங்க கட்டிகளை ஐதராபாத்தில் இருந்து கர்னூலுக்கு  அரசு பஸ்சில் வந்தேன்’ என்றார்.

Tags : Telangana ,Andhra Pradesh , Thirumalai: Andhra Pradesh, Kurnool DSP Mahesh told reporters yesterday: Taluka police at Kurnool Panchalingala customs post.
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...