வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலையோரம் அமைக்கப்படும் ராட்சத கான்கிரீட் உறை-பாதாள சாக்கடை திட்டத்திற்கு என்று மாநகராட்சி விளக்கம்

வேலூர் :  வேலூர் சத்துவாச்சாரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை, கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலை, கோர்ட் சாலைகளில் மெகா சைசில் சிமென்ட் கான்கிரீட் தூண்கள் போல 10 அடி உயரத்திற்கு உறைகள் செய்து வைக்கப்பட்டிருந்தது.

இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் அந்த பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்க உள்ளார்கள் என்று நினைத்திருந்தனர். இது எதற்காக வைத்துள்ளனர் என்று மக்களுக்கும் சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பாதாள சாக்கடை திட்டத்திற்காக, 30 மீட்டருக்கு ஒன்று என்ற அடிப்படையில் ராட்சத சிமென்ட் கான்கிரீட் உறைகள் தயார் செய்யப்படுகிறது. இவை பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 45 இடங்களில் திறப்பு மூடிகளுடன் வைக்கப்பட உள்ளது. இந்த ராட்சத சிமென்ட் கான்கிரீட் உறைகள் விரைவில் சாலைகளில் புதைக்கும் பணிகள் தொடங்கப்படும்’ என்றனர்.

Related Stories: