நட்டா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் நோட்டாவுக்கு கீழ் தான் பாஜகவிற்கு வாக்குகள் கிடைக்கும் : சீமான்

கரூர் : சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதிரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக மனித குல எதிரி என்று விமர்சனம் செய்தார். நட்டா எத்தனை முறை தமிழகத்திற்கு வநது  தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டாலும் பாஜக கட்சிக்கு நோட்டாவுக்கு கீழ் தான் வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், தற்போது இலவசமாக வாசிங் மெஷின் தருவதாக கூறுகிறார்கள். ஒரு முறை தருவார்கள். அது பழுது ஆகி விட்டால் மறுபடியும் தருவார்களா?. அதற்கு பதிலாக ஒரு வேலையை தாருங்கள். அதற்கு ஒரு வருமானத்தை தாருங்கள். நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்றால் பதில் இல்லை. இன்றைய ஆட்சியில் தண்ணீரை கூட காசு கொடுத்து தான் வாங்க வேண்டியுள்ளது.  இந்த தேர்தலை வரலாறு நமக்காக தந்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தரமான மருத்துவம், தூய குடிநீர், சுவாசிக்க நல்ல காற்று, தடையில்லா மின்சாரம் இவையெல்லாம் வேண்டுமானால் விவசாய சின்னத்தில் வாக்களித்து எங்களை வெற்றி பெற செய்யுங்கள். இது மாற்றத்திற்கான காலம். மாறுவோம். மாற்றுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More
>