×

தோகைமலை அருகே சிவாயத்தில் எருதுகள் மாலை தாண்டும் திருவிழா-ஆயிரக்கணக்கான காளைகள் பங்கேற்பு

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட வில்லுக்காரன்பட்டியில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கான மாரியம்மன் கோயில் உள்ளது. பஸ்பேரிநாயக்கர் மந்தையில் உள்ள இக்கோயிலில் மாலை தாண்டும் திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது.

தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் உள்பட பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்தினர். 3ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சலை எருது மாடுகள் மாழை தாண்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நுற்றுக்கணக்கான காளைகளுடன் வந்திருந்த 14 மந்தையர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கபட்டது.

பின்னர் மாரியம்மன் கோயில் முன் அனைத்து மந்தைகளின் சலை எருது மாடுகளுக்கு புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் தாரை தப்பட்டை உருமி மேளம் முழங்க கோயில் எதிரே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கொத்துக்கொம்பு எல்லைசாமி கோயிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர். அங்கு எருதுகளுக்கு புன்னிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அங்கிருந்து பஸ்பேரி நாயக்கர் மந்தையில் அமைக்கப்பட்ட எல்லை கோட்டை நோக்கி சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில் முதலாவதாக ஓடிவந்த சலைஎருது மாட்டின் மீது, இவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சல் பொடியினை தூவி எலுமிச்சம் பழம் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து சமூக வழக்கப்படி தேவராட்டத்துடன் மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் கரகத்தை மஞ்சல் நீராட்டுடன் எடுத்துச்சென்று சாமிகளுக்கு வழி அனுப்பி வைத்தனர். இதில் ஊர்நாயக்கர், மந்தா நாயக்கர் உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : bull crossing festival ,Sivayam ,Tokaimalai , Tokaimalai: Kambalathu Nayakkar resides at Villukkaranpatti in Sivayam panchayat near Tokaimalai in Karur district.
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில்...