×

மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைேவற்றப்படும்-திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் உறுதி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் நேற்று நகராட்சிக்குட்பட்ட 17, 18 மற்றும் 19வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி  நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று, உதய சூரியன் சின்னத்தில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவர் சென்ற இடமெல்லாம்,  பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

இதில், மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி, மாநில செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, வட்ட செயலாளர் கரியாம்பட்டி செல்வவராஜ், வட்ட பிரதிநிதி ஆகிமூர்த்தி, சார்பு அணி நிர்வாகிகள் பொட்டுமேடு தங்கவேல், வீரமணி, கோசி மணிகண்டன், சிவானந்தம், திருமுருகன், ஆறுமுகசாமி, ஆசிப், பட்டீஸ்வரன், மகளிர் அணி நகர அமைப்பாளர் ஜெயலட்சுமி கலந்து கொண்டனர்.
பிரசாரத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் கூறுகையில்,`பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில்  சாலை வசதி, சீரான குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக மேற்கொள்ளாமல் உள்ளது.

அதுமட்டுமின்றி நகராட்சிக்குட்பட்ட குறிப்பிட்ட சில வார்டுகளை தவிர மற்ற வார்டுகளில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கும்போது, பல இடங்களில் தண்ணீரின் அழுத்தம் இன்றி குறிப்பிட்ட சில மணிநேரமே குடிநீர் வினியோகம் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். டீச்சர்ஸ் காலனி மற்றும் பொட்டுமேடு, மரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதி என்பது மிகவும் குறைவாக உள்ளது.

அதுபோல், பாதாளா சாக்கடை என்ற பெயரில் மக்களுக்கு எதிரான செயல்கள் நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இப்பணி இழுத்தடிப்பதால் மக்கள் பல ஆண்டுகளாக வேதனையடைந்துள்ளனர்.திமுக ஆட்சி வந்ததும், மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனுக்குடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன். எனவே, உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்’ என்றார்.

Tags : Varadarajan , Pollachi: Pollachi Assembly constituency DMK candidate Dr. Varadarajan yesterday held the 17th, 18th and 19th municipal elections.
× RELATED மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி