கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா: சிறிய அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன்: ட்விட்டர் பதிவு !

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்குதலுக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்புகள் மிக மோசமான நிலை காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.  

இந்நிலையில், மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: சிறிய அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜாம்பவான் அணி கேப்டனாக சச்சின் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: