×

எகிப்து நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் : 32 பேர் உடல்நசுங்கி பலியான பரிதாபம்; 66 பேர் படுகாயம்!!

கெய்ரோ : எகிப்து நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு எகிப்தின் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில், தலைநகர் கெய்ரோவிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. எகிப்தின் தெற்கே ஷோஹாக் மாகாணத்தின் டாஹத்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு மோதிக்கொண்டன. இதில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த கோர விபத்தில் ரயிலில் பயணம் செய்த பலர் இன்னும் மீட்கப்படவில்லை என்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்து  ஏற்பட்ட அதிர்ச்சியால் சிலர் சுயநினைவின்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.இவ்விபத்தானது எமர்ஜென்சி பிரேக்கை தவறுதலாக யாரோ இயக்கியதால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்விபத்தில் முதல் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கவிழ்ந்துவிட்டன.

எகிப்து வட ஆப்பிரிக்காவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும்.2017ம் ஆண்டில் நாடு முழுவதும் 1,793 ரெயில் விபத்துக்கள் நடந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.ஒரு வருடத்திற்கு  முன்னதாக, மத்தியதரைக்கடல் துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவுக்கு வெளியே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில்  43 பேர் பலியானார்கள். 2016 ஆம் ஆண்டில், கெய்ரோ அருகே இரண்டு பயணிகள் ரெயில்கள் மோதியதில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டனர்.கெய்ரோவிலிருந்து தெற்கு எகிப்துக்கு பயணித்த அதி வேக ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2002 ல் எகிப்தின் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.

Tags : Egypt , Egypt, trains, conflict
× RELATED கந்தகக்கல்: நீதிபதிகளின் ஆகாய வர்ண ரத்தினம்