முதல் டெஸ்ட் டிரா

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. நார்த் சவுண்ட், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில்  இலங்கை 169 ரன், வெ.இண்டீஸ் 271 ரன் எடுத்து ஆட்டமிழந்தன. 102 ரன் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சில் உறுதியுடன் விளையாடிய இலங்கை அணி 476ரன் குவித்து ஆல் அவுட்டானது. திரிமன்னே 76, ஒஷதா 91, தனஞ்ஜெயா 50, பதும் நிசங்கா 103, டிக்வெல்லா 96 ரன் விளாசினர். இதையடுத்து, 375 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெ.இண்டீஸ் 2வது இன்னிங்சை விளையாடியது. கடைசி நாளான நேற்று  அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன் (100 ஓவர்) எடுத்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 113 ரன்னுடன் (274 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்) களத்தில் இருந்த நக்ருமா போனெர் ஆட்ட நாயகனாக தேர்வானார். 2வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 29ம் தேதி இதே மைதானத்தில் தொடங்குகிறது.

Related Stories:

>