மயாமி ஓபன்: ஹாலெப் 400!

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் 3வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் கரோலின் கார்சியாவுடன் (பிரான்ஸ்) மோதிய ஹாலெப் 3-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். டபுள்யு.டி.ஏ பிரதான சுற்று ஆட்டங்களில் ஹாலெப் பெற்ற 400வது வெற்றியாக இது அமைந்தது. முன்னணி வீராங்கனைகள் ஆஷ்லி பார்தி (ஆஸி.), பெத்ரா குவித்தோவா (செக்.), அரினா சபலென்கா (பெலாரஸ்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), ஜோகன்னா கோன்டா (இங்கிலாந்து), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பெலிண்ட பென்சிக் (சுவிஸ்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories:

>